குடிசை வீட்டில் வசிப்பவருக்கு ரூ.7 ஆயிரம் மின்கட்டணம்


குடிசை வீட்டில் வசிப்பவருக்கு ரூ.7 ஆயிரம் மின்கட்டணம்
x
தினத்தந்தி 28 March 2021 2:52 AM IST (Updated: 28 March 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

குடிசை வீட்டில் வசிப்பவருக்கு ரூ.7 ஆயிரம் மின்கட்டணம் விதிக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோடு கனிராவுத்தர் குளம் பச்சபாளிமேடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் அந்த பகுதியில் உள்ள குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வீட்டு மின் இணைப்பு கட்டணத்தை செலுத்தவில்லை. இதனால் கடந்த 24-ந் தேதி அவரது வீட்டு மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். இதையடுத்து அவர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின்கட்டண விவரத்தை கேட்டார். அப்போது ரூ.7 ஆயிரத்து 58 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்ததால் துரைசாமி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது வீட்டு மின் இணைப்புக்கு ஒவ்வொரு தடவையும் ரூ.410 முதல் ரூ.480 வரை மட்டுமே கட்டணம் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது 800 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ரூ.7 ஆயிரத்து 58 கட்டணம் விதிக்கப்பட்டதாகவும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே மின்சாதன அளவீடு கருவியில் பழுது அல்லது வேறு ஏதாவது தவறு நடந்து உள்ளதா? என்பதை மின்வாரிய ஊழியர்கள் பார்வையிட்டு சரி செய்ய வேண்டும்”, என்றார்.

Next Story