திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் தேரோட்டம்


திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 28 March 2021 3:03 AM IST (Updated: 28 March 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருவிடைமருதூர்;
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். 
கம்பகரேஸ்வரர் கோவில் 
கும்பகோணம் அருகே உள்ள திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பல்வேறு இன்னல்களை போக்க கூடிய சரபேஸ்வரர் வீற்றிருக்கும் சிறப்பு தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலின் உருத்திரபாத திருநாள் உற்சவம் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. 
தேரோட்டம்
9-ம் நாள் விழாவாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது முன்னதாக அதிகாலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் தொடங்கி வைக்க திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அறம் வளர்த்தநாயகி உடனாய கம்பகரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் செல்ல தனி அம்பாள் சிறிய தேரில் பின்தொடர்ந்து வீதி உலா சென்றார். திருபுவனத்தின் 4   முக்கிய தேரோடும் வீதிகளில் தேர் சென்று நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். 
தீர்த்தவாரி
 இன்று(ஞாயி்ற்றுக்கிழமை) காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.  ஏப்ரல் 4-ந் தேதி சரபேஸ்வரர் ஏகதின உற்சவமும் சரபமூர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதினம் ஆலோசனையின்பேரில் காசாளர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

Next Story