அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்


அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 28 March 2021 4:07 AM IST (Updated: 28 March 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் 2 வது நாளாக போராட்டம் காரணமாக ரூ.20 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்
பின்னலாடை உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளாக அட்டை பெட்டி இருந்து வருகிறது. தயாரிக்கப்பட்ட பின்னலாடைகள் அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த அட்டை பெட்டிகளை தயாரிக்க திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் 600 க்கும் மேற்பட்ட அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அட்டை பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
இதனால் இந்த விலை உயர்வை கண்டித்தும், கிராப்ட் பேப்பர் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரியும் தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கோவை மண்டலம் சார்பில் நேற்று முன்தினம் உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்றும் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 2 நாட்கள் நடந்த போராட்டத்தில் ரூ.20 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பும் இழந்தனர். இன்னும் விலை குறையவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என சங்க செயலாளர் ராஜேஷ் தெரிவித்தார்.

Next Story