பொம்மிடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.85 ஆயிரம் பறிமுதல்
பொம்மிடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.85 ஆயிரம் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்ட எல்லையான பொம்மிடி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் அருகில் கடத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரி தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
காரில் ரூ.85 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் பொம்மிடியை சேர்ந்த சின்னசாமி என்பதும், உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் நசீர் இக்பாலிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story