அமராவதி ஆற்றில் கொட்டப்படும் மரக்கழிவுகள்


அமராவதி ஆற்றில் கொட்டப்படும் மரக்கழிவுகள்
x
தினத்தந்தி 28 March 2021 4:33 AM IST (Updated: 28 March 2021 4:33 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி ஆற்றில் கொட்டப்படும் மரக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

மடத்துக்குளம்
கொழுமம், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், ஆகிய பகுதிகளில் அமராவதி ஆற்றுப்பாதை அமைந்துள்ளது. இந்த அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், அவ்வப்போது, இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள், அமராவதி ஆற்றின் கரையோரப்பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்களின் அனுமதியின் பேரில், நிழல் தரும் மரங்களை நட்டு வருகிறோம். இதனால் மழை வளம், மண் வளம், சிறப்பாக இருக்கும். ஆனால் அமராவதி ஆற்றுப்படுக்கையின் கரையோரப்பகுதிகளில், உள்ள பல்வேறு இன மரங்களை, மரவியாபாரிகள் எந்திரம் கொண்டு வெட்டி  சாய்க்கப்படுகிறது. பின்னர் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் துண்டு, துண்டுகளாக வெட்டப்பட்டு, கனரக வாகனங்களில், 10 க்கும் மேற்பட்ட ஆட்கள் உதவியுடன் ஏற்றப்பட்டு பல்வேறு மர அறுவை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் வெட்டப்பட்ட மரங்களின் கிளைகள் மற்றும் அறுவை செய்யப்பட்ட மரக்கழிவுகளை அமராவதி ஆற்றின் நீர் நிலைகளிலேயே கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இந்த கழிவுகள் மீது இவ்வழியாக செல்லும் வாகனத்தில் கொண்டு வரப்படும் பல்வேறு கழிவுகளும், இதன் மீது கொட்டப்படுகிறது. இதனால் நாளடைவில் இது முற்றிலும் மாசுபடும் கழிவுகளாக மாறி, ஆற்றின் தண்ணீரை மாசுபடுத்துகிறது. இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்தும்போது பல்வேறு நோய்களுக்கு ஆளாவதற்கும், சுகாதார சீர்கேடுகள் உருவாகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story