அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா


அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 28 March 2021 5:44 AM IST (Updated: 28 March 2021 5:44 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று முடிவு செய்யப்ட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். பொது பார்வையாளர் மாஷீர் ஆலம் முன்னிலை வகித்தார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் வசதி குறித்து தெரிவிக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 
பதற்றமான வாக்குச்சாவடிகளில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கருத்துக்களை எழுத்து பூர்வமாக தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் உதவி ஆணையாளர்கள் சந்தானநாராயணன், வாசுகுமார், சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு முதன்மை பயிற்சி அதிகாரி மாரிமுத்து, தேர்தல் உதவியாளர் குமரேசன், கணினி திட்ட உதவியாளர் சவுதாமணி, போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story