மகளிர் சுய உதவிக்குழுவினர் மேம்பாடு அடைய நடவடிக்கை; விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் உறுதி
பெண்கள் மேம்பாடு என்பது மிக அவசியம் என்ற வகையில் பாரத பிரதமர் மோடி பெண்களுக்கான நலத் திட்டங்கள் பலவற்றை அமல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் விருதுநகர் தொகுதியிலும் ஏழை எளிய பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொகுதி பாஜக வேட்பாளர் பாண்டு ரங்கன் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறிய தாவது தொகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மகளிர் திட்டத்தின் மூலமும் சுழல் நிதி மற்றும் வங்கி கடனுதவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் தேவையில்லாமல் தனியாரிடம் கடன் வாங்கி பொருளாதார சிக்கலில் மாட்டும் பெண்களை மீட்க மகளிரை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் ஆக்கி அவர்களுக்கு சுய தொழில் தொடங்க உரிய பயிற்சி மற்றும் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் சமூக நலத் துறையின் மூலம் பெண் களுக்கான நலத்திட்டங்கள் முறையாக தகுதி உள்ள பெண்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் படித்த இளம் பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கமும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதில் இடைத் தரகர்கள்தலையீடு முற்றிலுமாகத் தவிர்க்கப்படும் மேலும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்
கும் நடைமுறை எளிதாக்க படும்.தேவையில்லாத சான்றிதழ் கேட்டு அலைக் கழிப்பது தவிர்க்கப்படும்சமூக நலத்துறை மூலம் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் யாவும் தடையின்றி தகுதி உள்ளவர்களுக்கு கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
முதியோர் உதவித் தொகை பெற்று வந்த நிலையில் இடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறி தகுதியுடைய முதியவருக்கு பலருக்கு அவர் வாங்கி வந்த உதவித்தொகை ரத்து செய்யப்பட்டு விட்டது இதனால் பலர் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டனர். எனவே இது பற்றி மீண்டும் வருவாய்த்துறை மூலம் உரிய முறையில் ஆய்வு நடத்தி தகுதி உள்ள முதியோர் அனைவருக்கும் மீண்டும் உதவித் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்முனை வோராக விரும்பும் பெண் களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய பயிற்சி அளித்து தொழில் தொடங்க அவர்கள் வங்கி நிதியுதவி கிடைக்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பெண் குழந்தை பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டு தான் இந்த மாவட்டத்தை வளரத் துடிக்கும் மாவட்டத்தின் பட்டியலில் இம் மாவட்டம் சேர்க்கப்பட்டு ள்ளது இதன்மூலம் நரிக்குடி திருச்சுழி பகுதிகளில் பெண் குழந்தை பிறப்பு சதவீதம் அதிகரித்துள்ளது இதே போன்று மாவட்டம் முழுவதும் பிறந்த குழந்தைகள் வளர் இளம் பெண் குழந்தைகள் ஆகியோரின் நலன் பாதுகாக் கப்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பெண் கல்வி மிக அவசியம் என்பதை கருத்தில் கொண்டு பெண் குழந்தைகள் பள்ளிகளில் இடை நிற்றலை தவிர்த்து சிறப்பு பள்ளிகள் மூலம் அவர்கள் கல்வியைத் தொடர புதிய வழிகாட்டுதல்கள் பெறப்படும். தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் பெண்களின் உடல்நலம் பேணஉரிய நடவடிக் கைகள் எடுக்கப்படும் மொத் தத்தில் தொகுதியில் பெண் குழந்தைகள் பெண் தொழிலா ளர்கள் படித்த இளம் பெண்கள் முதியோர் ஆகியோர் நலனுக்காக தேவை யான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார் .
நேற்று பாண்டியன் நகர் பகுதியிலும் விருதுநகர் பகுதியிலும் வேட்பாளர் பாண்டுரங்கன் வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக ஒன்றியச் செயலர் தர்மலிங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் சென்றனர். விருதுநகர் பாண்டியன் நகரில் பாஜக வேட்பாளர் பாண்டுரெங்கன் வாக்கு சேகரித்த போது எடுத்த படம் உடன் மேற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் விஜயகுமரன் கிழக்கு ஒன்றியச் செயலாளர் தர்மலிங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
Related Tags :
Next Story