மதுரை வடக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் சரவணன் எம்எல்ஏவுக்கு நடிகர் செந்தில் பிரச்சாரம்


பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் சரவணன் எம்எல்ஏவிற்கு நடிகர் செந்தில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம்
x
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் சரவணன் எம்எல்ஏவிற்கு நடிகர் செந்தில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம்
தினத்தந்தி 28 March 2021 8:00 AM IST (Updated: 28 March 2021 7:56 AM IST)
t-max-icont-min-icon

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் சரவணன் எம்.எல் ஏ. தீவிரபிரச்சாரம் செய்து வாக்குசேகரித்து வருகிறார்.

செல்லூர் 60 அடிரோடு எழில்தெரு, போஸ் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று நடிகர் செந்தில்ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையின் படி பொதுமக்களுக்குவருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள், கேபிள் டிவி இலவசம் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ 1500, கிடைத்திட டாக்டர் சரவணனுக்குதாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்நலத் திட்டங்கள் யாவும்கிடைத்திட டாக்டர் சரவணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு செய்த சாதனை மதுரை வடக்கு தொகுதியிலும் தொடர தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மதுரை வடக்கு தொகுதி மக்களுக்கு சேவை செய்திட வேதிருப்பரங்குன்றம் முருகப் பெருமானே டாக்டர் சரவணனை அனுப்பி உள்ளார்.

பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா வடக்கு தொகுதி சட்டமன்ற மாநில பொறுப்பாளர் திருமலைசாமி, பொறுப்பாளர்கள்வீரா மணிகண்டன், அதிமுக பொறுப்பாளர்கள் ஜெயவேல் பாஸ்கரன் ராம்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story