கால அவகாசம் கொடுத்தால் நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பேன்; இளம்பெண் 5-வது வீடியோ வெளியிட்டார்


கால அவகாசம் கொடுத்தால் நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பேன்; இளம்பெண் 5-வது வீடியோ வெளியிட்டார்
x
தினத்தந்தி 28 March 2021 7:59 AM IST (Updated: 28 March 2021 7:59 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண் 5-வது வீடியோவை நேற்றிரவு வெளியிட்டார். அதில், தனக்கு தான் அநியாயம் நடந்தது என்றும், கால அவகாசம் கொடுத்தால் நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பேன் எனவும் கூறியுள்ளார்.


5-வது வீடியோ

  முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படும் இளம்பெண் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவருக்கு விசாரணைக்கு ஆஜராக போலீசார் 6-வது முறையாக நோட்டீசு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று சிறப்பு விசாரணை குழு போலீசார் முன்பு ஆஜரான இளம்பெண்ணின் பெற்றோர் எங்கள் மகளை அரசியல் ஆதாயத்திற்காக டி.கே.சிவக்குமார் கடத்தி வைத்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தனர்.

  ஆனால் நேற்று இளம்பெண் வெளியிட்ட 4-வது வீடியோவில் ரமேஷ் ஜார்கிகோளி தன்னையும், தனது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயற்சி செய்கிறார் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இளம்பெண் 5-வதாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.
  அந்த வீடியோவில் இளம்பெண் பேசி இருந்ததாவது:-

எனக்கு தான் அநியாயம் நடந்தது

  ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் அநியாயம் நடந்தது எனக்கு தான். உண்மை நிலை எனது பெற்றோருக்கு தெரியாது. இந்த விஷயத்தில் எனது பெற்றோர் கூறுவது முக்கியத்துவம் இல்லை. பாதிக்கப்பட்ட நான் கூறுவதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, டி.கே.சிவக்குமார் ஆகியோர் எனக்கு உதவ வேண்டும். இந்த வழக்கில் அநியாயம் நடந்து கொண்டு இருக்கிறது.

நீதிபதி முன் விளக்கம் அளிப்பேன்

  எனக்கு கால அவகாசம் கொடுத்தால் நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பேன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

  இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story