தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுனனுக்கு கால் முறிவு
தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுனனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
கோவை
கோவை வடக்கு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். கோவை கணபதி மாநகர் பகுதியில், நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் இருந்த குழியில் கால் தடுக்கியது.
இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஒரு சில நாட்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து வீட்டில் தங்கி இருந்து ஓய்வு எடுத்துவருகிறார்.
Related Tags :
Next Story