கோவையில் 7,854 பேரிடம் தபால் ஓட்டுகள் இன்று முதல் சேகரிப்பு
கோவையில் 7,854 பேரிடம் தபால் ஓட்டுகள் இன்று முதல் சேகரிக்கப்படுகிறது.
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிககளில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7,249 பேரும், மாற்று திறனாளிகளில் 605 பேரும் என மொத்தம் 7,854 பேர் தபால் ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
இதற்காக நியமனம் செய்யப்படட குழுவினர் வாக்காளர்களின் இல்லத்திற்கே சென்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் தபால் ஓட்டுகளை சேகரிக்க உள்ளனர். தேர்தல் அலுவலர்கள் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
தேர்தல் அலுவலர்கள் 2-வது முறை வந்தும் ஓட்டுப்போட முடியாதவர்கள் வருகிற 6-ந் தேதி வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஓட்டுப்போட அனுமதிக்கப்பட மாட்டார்கள். பதிவாகும் தபால் வாக்குகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் பாதுகாப்பாக வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story