தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 140 வழக்குகள் பதிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறை மீறலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நடத்தை விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
140 வழக்கு
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அ.தி.மு.க.வினர் மீது 23 வழக்குகளும், தி.மு.க.வினர் மீது 31 வழக்குகளும், பா.ஜனதா கட்சியினர் மீது 5 வழக்குகளும், அ.ம.மு.க.வினர் மீது 21 வழக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மீது 2 வழக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது 10 வழக்குகளும், நாம் தமிழர் கட்சியினர் மீது 5 வழக்குகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது 5 வழக்குகள் உள்பட 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 21 வழக்குகளும், தூத்துக்குடியில் 25 வழக்குகளும், திருச்செந்தூரில் 18 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 17 வழக்குகளும், ஓட்டப்பிடாரத்தில் 18 வழக்குகளும், கோவில்பட்டியில் 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story