தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழா


தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழா
x
தினத்தந்தி 28 March 2021 5:03 PM IST (Updated: 28 March 2021 5:03 PM IST)
t-max-icont-min-icon

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தென்திருப்பேரை:
தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில் நவ திருப்பதிகளில் ஏழாவது கோவிலாகும். இக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று பத்து நாள் திருவிழா ஆரம்பமாகும். 
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு கோவில் முன் மண்டபத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் காலை, மாலை பெருமாள் நிகரில் முகில்வண்ணன் வீதி உலா வரும் காட்சி நடைபெறும். ஏப்ரல் 1-ஆம் தேதி கருட சேவையும், ஏப்ரல் 5-ந் தேதி தேரோட்டமும் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.  எனவே இந்த ஆண்டு பல கட்டுப்பாடுகளுடன் முகக்கவசம், கையுறை அணிந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் பொன்னி, செயல் அலுவலர் இசக்கியப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story