ஸ்ரீரங்கம் தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி தீவிர வாக்கு சேகரிப்பு
ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும் உள்ள முக்கிய தேவைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்று வேன், என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சோமரசம்பேட்டை,
ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி நேற்று அந்த நல்லூர் ஒன்றியத்திற்குட் பட்ட காவல்காரபாளையம், சிறுகமணி, பெருக மணி, பெட்டவாய்த்தலை, கீழ ஆரியம்பட்டி, தேவஸ் தானம், பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன்.
ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும் உள்ள முக்கிய தேவைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்று வேன், என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் ஜீயபுரம், குழு மணி, சோமரசம்பேட் டை, இனாம்குளத்தூர், மறவ னூர், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார் அவருடன் கூட்டணி கட்சி நிர் வாகிகளும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஸ்ரீரங்கம் தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
Related Tags :
Next Story