புதிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள எனக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் வேண்டுகோள்
புதிய வளர்ச்சி் பணிகளை மேற்கொள்ள எனக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார், நேற்று மயிலாடுதுறை நகரில் உள்ள மூங்கில் தோட்டம் மாந்தோப்பு தெரு, பர்மாகாலனி, நாஞ்சில்நாடு, கொத்த தெரு, புதுத்தெரு, தரங்கம்பாடி சாலை, சின்னகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். ஒரு சில இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அந்த பகுதி மக்களிடம் கூறுகையில், ஏற்கனவே நான் சட்டசபை உறுப்பினராக இருந்தபோது மயிலாடுதுறை நகரில் ஏராளமான வளர்ச்சி பணிகள் செய்துள்ளேன். தொடர்ந்து புதிய வளர்ச்சி் பணிகள் மேற்கொள்ள எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போது அவருடன் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியசீலன், நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ், மாவட்ட வக்கீல் அணி நிர்வாகிகள் ராம.சேயோன், தணிகை பழனி, காங்கிரஸ் வட்டார தலைவர் ராமானுஜம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story