தியாகதுருகம், சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் அலகுகுத்தியும், காவடி, பால்குடம் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தியாகதுருகம், சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் அலகுகுத்தியும், காவடி, பால்குடம் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
x
தினத்தந்தி 28 March 2021 10:42 PM IST (Updated: 28 March 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம், சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் அலகுகுத்தியும், காவடி, பால்குடம் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கண்டாச்சிமங்கலம்


பாலசுப்பிரமணியசாமி

தியாகதுருகம் கடைவீதியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி எடுத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலுக்கு அருகில் உள்ள கோட்ட குளக்கரையில் காவடிகளுக்கு அபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மேள, தாளம் இசைக்க 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்திக் கொண்டும் முருகனுக்கு அரோகரா, வெற்றிவேல், வீரவேல் உள்ளிட்ட பல்வேறு பக்தி கோஷங்களை எழுப்பியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

அன்னதானம் 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனையும், இரவு சாமி வீதி உலாவும் நடைபெற்றது.இன்று(திங்கட்கிழமை) காலை இடும்பன் பூஜை விழா, மாலையில் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

சுப்பிரமணியசாமி கோவில்

அதேபோல் சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திரவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான பங்குனி உத்திரவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் மணிநதியில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய   சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.  அதேபோல் சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தீமிதி விழாவும், பக்தர்கள் காவடி எடுத்தும் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. சங்கராபுரம் காலனி முருகன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. தேவபாண்டலம் குந்தவேல் முருகன்கோவில், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகப்பெருமான் கோவில், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story