திருக்கோவிலூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருக்கோவிலூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அருணாபுரம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மர்மநபர்கள் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் திடீர் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 500 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story