உளுந்தூர்பேட்டையில் 1,008 பால்குட ஊர்வலம்


உளுந்தூர்பேட்டையில் 1,008 பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 28 March 2021 11:18 PM IST (Updated: 28 March 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் 1,008 பால்குட ஊர்வலம்

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை சுப்பிரமணியசாமி கோவிலில், பங்குனி உத்திர விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று காலை உளுந்தூர்பேட்டை வேடசெட்டி கோவில் குளக்கரையில் உள்ள முருகனுக்கு காவடி ஸ்தாபன பூஜை நடைபெற்றது.பின்னர் பக்தர்கள் காவடி சுமந்தும், முதுகில் அலகு குத்தி சிறிய தேரை இழுத்தும், 1,008 பெண்கள் பால்குடம் சுமந்தும் மேள, தாள இசையுடன் ஊர்வலம் புறப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர். உளுந்தூர்பேட்டை குளக்கரையில்இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் தேரோடும் வீதி வழியாக சுப்பிரமணிய சுவாமி கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 

விழாவில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story