நகை பட்டறை உரிமையாளரிடம் வைர மோதிரம் பறித்த 3 பேர் கைது
கோவையில் நகை பட்டறை உரிமையாளரிடம் வைர மோதிரத்தை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடகிருஷ்ணா ரோட்டை சேர்ந்தவர் பால சண்முகம் (வயது 42). இவர் அதே பகுதியில் டிராவல் ஏஜென்சி மற்றும் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் ரூ.2 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் வைத்து இருந்தார்.
பண நெருக்கடி காரணமாக அவர், வைர மோதிரத்தை விற்பனை செய்து தருமாறு தனது நண்பரும் நகைபட்டறை உரிமையா ளருமான பாலமுருகனிடம் (40) கொடுத்து உள் ளார். இது பற்றி பாலமுருகன், தனது மற்ற நண்பர்களிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.நகரை சேர்ந்த ஆறுமுகம் (42) என்பவர் பாலமுருகனை தொடர்புகொண்டு வைர மோதிரத்தை வாங்க விரும்புவதாகவும், கடந்த 18-ந் தேதி மதியம் காந்திபுரம் 2-வது வீதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
அதை நம்பி பாலமுருகன் வைரமோதிரத்துடன் அங்கு தனியாக சென்றார். அங்கு ஆறுமுகமும் வந்தார். இந்த நிலையில், அங்கு திடீரென்று வந்த 3 பேர் நாங்கள் போலீஸ் என்றும், நீங்கள் வைத்திருப்பது கடத்தல் வைரமா? என்று கேட்டு மிரட்டினர்.
ஆனால் பாலமுருகன், அந்த வைர மோதிரம் தனது நண்பருடையது என்று கூறி அவர்களிடம் நகையை கொடுக்க மறுத்தார்.
உடனே அந்த 3 பேரும் திடீரென்று பாலமுருகனிடம் இருந்த வைரமோதிரத்தை பறித்து விட்டு தாங்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், வைரமோதிரம் வாங்க வந்த ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினர்.
இதில், அவர் தனது கூட்டாளிகளான கணபதியை சேர்ந்த ஜேக்கப் (48), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ் (42), உடையாம்பாளை யத்தை சேர்ந்த கார்த்திக் (35) ஆகிய 3 பேரை ஏற்பாடு செய்து போலீஸ் என்று கூறி பாலமுருகனிடம் இருக்கும் வைரமோதிரத்தை திட்டமிட்டு பறித்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, ஆறுமுகம், அவரது கூட்டாளிகளான ஜேக்கப், சுரேஷ் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வைர மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தப்பி ஓடிய கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதில், ஆறுமுகம் நகை பட்டறை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story