முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 28 March 2021 11:24 PM IST (Updated: 29 March 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

குன்னூருக்கு 1-ந் தேதி முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

குன்னூர்,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந் தேதி பிரசாரத்துக்காக வர உள்ளார். 

இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்கிடையில் குன்னூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆய்வு நடத்தினார். 

அப்போது முதல்-அமைச்சர் வரும் ஹெலிகாப்டர் இறங்கும் மைதானம், அவர் வாகனத்தில் வரும் சாலை, பிரசாரம் மேற்கொள்ளும் பஸ் நிலைய பகுதி ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

Next Story