2 மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு


2 மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 28 March 2021 11:41 PM IST (Updated: 28 March 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே அ.தி.மு.க. நிர்வாகியின் 2 மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் மலைராஜ் (வயது 55). இவர் அ.தி.மு.க.வில் சிவகங்கை ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராக இருக்கிறார்.சம்பவத்தன்று இரவு மலைராஜ் தனக்கு சொந்தமான 2 மோட்டார் சைக்கிள்களை தன்னுடைய வீட்டு அருகே உள்ள ஓட்டு கொட்டகையில் நிறுத்தி இருந்தார்.இந்நிலையில் நள்ளிரவில் யாரோ சிலர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டார்களாம். இ்ந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் ஓட்டு கொட்டகையும் எரிந்து சேதமானது.இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதுதொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story