கட்டையால் அடித்து தந்தையை கொன்ற தொழிலாளி கைது
மது குடிப்பதை கண்டித்ததால் கட்டையால் அடித்து தந்தையை கொன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
முத்துப்பேட்டை:
மது குடிப்பதை கண்டித்ததால் கட்டையால் அடித்து தந்தையை கொன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மது குடிப்பதை கண்டிப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த மேலநம்மங்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன்(வயது 70). இவரது மனைவி காசியம்மாள். இவர்களுக்கு பழனியப்பன் என்ற மகனும், உஷாராணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்த பழனியப்பன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். பழனியப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது முனியப்பனுக்கு பிடிக்கவில்லை. இதனால் பழனியப்பனை அவரது தந்தை கண்டித்து வந்துள்ளார்.
கட்டையால் அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பழனியப்பனை முனியப்பன் கோபத்தில் கட்டையால் அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பழனிப்பன் அதே கட்டையை பறித்து முனியப்பனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இந்த கொலை தொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பழனியப்பனை தேடிவந்தனர். இந்த நிலையில் பழனியப்பன் தஞ்சை மாவட்டம் மதுக்கூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பழனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story