காளையார்கோவிலுக்கு திரும்பிய சொர்ணவல்லி யானைக்கு உற்சாக வரவேற்பு


காளையார்கோவிலுக்கு திரும்பிய சொர்ணவல்லி யானைக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 29 March 2021 12:07 AM IST (Updated: 29 March 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

புத்துணர்வு முகாமிற்கு சென்று காளையார்கோவிலுக்கு திரும்பிய சொர்ணவல்லி யானைக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவில் யானையான சொர்ணவல்லி மேட்டுப்பாளையத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டது. அங்கு யானைக்கு சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டன. நடைபயிற்சி அளிக்கப்பட்டது. முகாம் நிறைவு பெற்றதையொட்டி லாரியில் நேற்று அதிகாலை காளையார்கோவிலுக்கு சொர்ணவல்லி யானை வந்து இறங்கியது. அந்த யானையை காளையார்கோவில் பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். முகாமுக்கு செல்லும் போது யானையின் உடல் எடை அதிகமாக இருந்ததால் எடையை குறைக்க கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவைகளால் சொர்ணவல்லி யானை 200 கிலோ எடை குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story