வயதானவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு போட்டனர்
வயதானவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு போட்டனர்.
வால்பாறை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுப்போடும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது.
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்பாறை மலைப்பகுதியில் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளும் தங்களது தபால் வாக்குகளை போட வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
இதற்காக அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட பெட்டியை எடுத்துச்சென்று தபால் வாக்குகள் உள்ளவர்களின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.
பின்னர் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் தபால் வாக்குகளை அந்த பெட்டியில் போட்டனர்.
Related Tags :
Next Story