கார் மீது புளியமரம் விழுந்து 5 பேர் படுகாயம்
வாணியம்பாடி அருகே கார் மீது புளியமரம் விழுந்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே கார் மீது புளியமரம் விழுந்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்.
வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரத்தில் உள்ள புளிய மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வாணியம்பாடியை அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியில் புளியமரத்தை வெட்டும் பணியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணியினர் செய்து வந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த கார் மீது திடீரென புளிய மரம் சாய்ந்தது. இதில் காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர்,
தகவல் அறிந்தவுடன் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story