கலவை காரீசநாதர் கோவிலில்திருக்கல்யாண உற்சவம்


கலவை காரீசநாதர் கோவிலில்திருக்கல்யாண உற்சவம்
x
தினத்தந்தி 29 March 2021 12:59 AM IST (Updated: 29 March 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

கலவை காரீசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கலவை

கலவை தர்மசம்வர்த்தினி சமேத காரீசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று முன்தினம் மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 6 மணியளவில் சோமசுந்தரர்-பார்வதிக்கு ஆகமவிதிப்படி பஞ்ச பூதங்கள் சாட்சிப்படி திருக்கல்யாண வரலாறு சொற்பொழிவுடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு சிவன்-அம்பாள் திருமணக்கோலத்துடன் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று அப்பாதுரைபேட்டையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். அந்த மண்டபத்தில் சாமி-அம்பாளுக்கு ஊஞ்சல் ேசவை நடந்தது. ஊஞ்சலில் எழுந்தருளிய சாமி, அம்பாளை பெண் பக்தர்கள் தாலாட்டுப் பாடி மகிழ்வித்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் கலவை சச்சிதானந்தசுவாமிகள், கோவில் குருக்கள் விஸ்வநாதன், பிரம்மோற்சவ கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Next Story