குமரி கோவில்களில் சிறப்பு வழிபாடு
பங்குனி உத்திரத்தையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாகர்கோவில்:
பங்குனி உத்திரத்தையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பங்குனி உத்திரம்
இந்துக்களின் வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஆண்டு தோறும் வரும் பங்குனி உத்திரம் நாளன்று குலதெய்வத்தை வழிபாடு செய்தால் குடும்பத்துக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் நாளன்று பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்தநிலையில் பங்குனி உத்திர விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. பொதுமக்கள் அதிகாலையிலேயே குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் சிலர் கோவிலில் பொங்கலிட்டு சாமிக்கு படைத்து வழிபட்டனர்.
சிறப்பு பூஜைகள்
இதே போல சாஸ்தா கோவில்களிலும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடந்தது. இங்கும் ஏராளமான மக்கள் சென்று வழிபாடு செய்தனர்.
பறக்கை பாறையடி சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. மேலும் பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், ஒழுகினசேரி சாஸ்தா கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
Related Tags :
Next Story