நெல்லை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர பாளையங்கோட்டை யூனியன், நெல்லை மாநகர பகுதி, களக்காடு, ராதாபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16013 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 12 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 15,660 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 138 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.Related Tags :
Next Story