மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவிலுக்கு திரும்பிய யானைகள்
மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவிலுக்கு திரும்பிய யானைகள்
அழகர்கோவில்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் உள்ள சுந்தரவல்லி என்னும் யானை கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகை பகுதியில் நடந்த புத்துணவு முகாமிற்கு லாரி மூலம் ெசன்றது. அங்கு தொடர்ந்து 48 நாட்கள் தங்கி இருந்தது. இந்நிலையில் புத்துணர்வு முகாம் முடிந்து நேற்று அதிகாலை சுந்தரவல்லி யானை லாரி மூலமாக சுமார் 6 மணி நேரம் பயணம் செய்து அழகர்கோவிைல வந்தடைந்தது. முகாமிற்கு சென்று வந்த சுந்தரவல்லி யானை தன் இருப்பிடம் வந்ததை அறிந்து மிகுந்த உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் காணப்பட்டது. முன்னதாக கோவிலுக்கு வந்த சுந்தரவல்லி யானைைய பக்தர்கள் வணங்கி வரவேற்றனர்.
மேலும் புத்துணர்வு முகாமில் இருந்து மீ னாட்சி அம்மன் கோவில் யானையும் நேற்று கோவிலுக்கு திரும்பியது.
Related Tags :
Next Story