மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாடிப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் ஷீலாதேவி (வயது 33). இவரது மகள் சிவஸ்ரீ. இவர் வாடிப்பட்டியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வருகிறார். அதனால் தேர்வு எழுதுவற்கு நேற்று காலை 9.30 மணிக்கு சிவஸ்ரீ மொபட்டை ஓட்ட ஷீலாதேவி பின்னால் உட்கார்ந்து பள்ளப்பட்டியில் இருந்து வாடிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பழனியாண்டவர் கோவில் பிரிவு அருகில் ஒரு தோட்டம் முன்பு வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 மர்ம மனிதர்கள் ஷீலாதேவியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story