கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு


கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு
x
தினத்தந்தி 29 March 2021 3:03 AM IST (Updated: 29 March 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர்
திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
குருத்தோலை ஞாயிறு
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதிவாரம் புனிதவாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 
இந்நிலையில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையே குருத்தோலை ஞாயிறு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்தரின் ஆலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி ஊர்வலமாக சென்றனர்.
விழிப்புணர்வு பேரணி
இதுபோல் திருப்பூர் குமார்நகர் அவினாசி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. மேலும் நேற்று மாலை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 100 சதவீதம் வாக்களிக்கும் வகையிலும், குருத்தோலை ஞாயிறையொட்டியும் ஆயர் வில்சன்குமார் தலைமையில் அவினாசி ரோட்டில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். இதில் செயலாளர் ஒய்.டி.வில்சன், பொருளாளர் தாய்மணி ஜோசப் மற்றும் திருப்பூர் வட்டக சி.எஸ்.ஐ. சபையினர் பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல் நல்லூர் அருள்நாதர் ஆலயம், நற்கருணை நாதர் ஆலயம், 60 அடி ரோட்டில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம், கோர்ட்டு ரோட்டில் உள்ள டி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலயம் உள்பட மாநகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் குருத்தோலை ஏந்தி ஊர்வலமும் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் இதில் பங்கேற்றனர்.

Next Story