குருத்தோலை பவனி
களக்காட்டில் குதுத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
களக்காடு, மார்ச்:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் குருத்தோலை பவனி நடந்தது. சபை ஊழியர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். திருமண்டல பெருமன்ற உறுப்பினர் சுபாஷ் அருள் துரை முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக குருத்தோலை ஏந்தி ஓசன்னா, பாடல்களை பாடியவாறு பவனி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை சேகர பொருளாளர் சுந்தர்ராஜ் மற்றும் சேகர உறுப்பினர்கள் செய்திருந்தனர். அதனைதொடர்ந்து ஜான் ஸ்டீபன் சிறப்பு செய்தி வழங்கினார்.
Related Tags :
Next Story