சரக்கு வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து வாலிபர் பலி; நண்பர் படுகாயம்


சரக்கு வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 29 March 2021 4:05 AM IST (Updated: 29 March 2021 4:05 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் பலி

ஓமலூர்:
கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தனது நண்பர் பழனிவேல் என்பவரை அழைத்து வர சென்றுள்ளார். பின்னர் அவர்கள் திரும்பி வரும் போது, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குப்பூர் அருகே வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரது நண்பர் பழனிவேல் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story