மக்கள் தேவையறிந்து சேவை புரிவேன்; தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்குவேன்; தேர்போகி வி பாண்டி


மக்கள் தேவையறிந்து சேவை புரிவேன்; தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்குவேன்; தேர்போகி வி பாண்டி
x
தினத்தந்தி 29 March 2021 7:00 AM IST (Updated: 29 March 2021 7:06 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரான தேர்போகி வி பாண்டி காரைக்குடி, தேவகோட்டை ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தற்போது மக்கள் அரசியல் கட்சிகளை பார்க்காமல் வேட்பாளர்களின் தகுதி, கடந்த கால செயல்பாடு, நேர்மை, சேவை மனப்பான்மை ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்தே வாக்களிக்கின்றனர். நான் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், பேதங்கள் பார்க்காமல் மக்களோடு அன்பாக பழகி வருகிறேன். இதனாலேயே கண்ணங்குடி யூனியனில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றோம், தான் கஷ்டப்பட்டிருந்தால் தான் அடுத்தவன் கஷ்டம் புரியும், நான் சிறுவயது முதலே கஷ்ட்டப்பட்டு வளர்ந்தவன் என்பதால் மக்கள் தேவை அறிந்து சேவை புரிவேன். கண்ணங்குடி ஒன்றியத்தில் நாங்கள் பொறுப்பு வகித்தபோது, அந்த பகுதியில் உள்ள 213 கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி செய்து கொடுத்தேன், மின்சாரம் பற்றாக்குறையாக இருந்த அப்பகுதியில் ரூ.13 கோடி செலவில் துணை மின் நிலையம் அமைக்கச்செய்து அப்பகுதி மின்சார வசதியை அதிகப்படுத்தினேன்.

ஒரு யூனியனின் தலைவராக இருந்தபோதே மக்கள் விரும்பும் வகையில் பணியாற்றி பல்வேறு திட்டப் பணிகளை செய்து கொடுக்க முடிந்தது. சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு அளித்தால் அப்பதவியை பயன்படுத்தி தொகுதி மக்களுக்கு மேலும் பல்வேறு நன்மைகளை செய்வேன். அப்பதவியை எனது சுயலாபத்திற்காக ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.தமிழகத்திலேயே அதிக கண்மாய் பாசன வசதி கொண்டது நமது தொகுதி எனவே ஒவ்வொரு கண்மாயிலும் ஆழ்குழாய் கிணறு அமைத்து இலவச மின்சாரம் பெற்று தந்து விவசாயம் செழிக்க நடவடிக்கை மேற்கொள்வேன். இப்பகுதியிலேயே 
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன் நான் செய்கின்ற பணியால் எனக்குப் பின்னால் இப்பதவிக்கு வருபவர்களும் அப்பணியை செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்துவேன். 

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வியை அளிக்க உரிய கட்டமைப்பு வசதிகளுடன் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை உருவாக்குவோம். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பமாக அறிவிக்கச்செய்து அரசின் நலத்திட்டங்களை எளிதில் கிடைக்கச் செய்வோம் ஏரிகள் கண்மாய்களில் மிதவை க்கூடுகள் அமைத்து மீன் வளர்ப்பு செய்ய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சியும் நிதி உதவியும் கிடைக்க ஏற்பாடு செய்வேன்.17 க்கும் மேற்பட்ட தொழிலாளர் நல வாரியங்கள் இருந்தும் தொழிலாளர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. பெயரளவிற்கு இருக்கும் இந்த வாரியங்களுக்கு புத்துயிர் அளித்து தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் .தனித்துவமான பண்பாடு. கலாச்சாரம். வாழ்க்கைமுறை கொண்ட இத்தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்குவேன்.

Next Story