கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து பெயிண்டர் கைது
கிருஷ்ணகிரி அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 23). இவருடைய நண்பரான அதே ஊரை சேர்ந்தவர் சிவராஜ் (20). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெயிண்டரான சத்தியராஜ் (29) என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் சத்தியராஜ் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, அவரது மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 26-ந் தேதி நள்ளிரவு சந்தோஷ்குமார் அதே ஊரில் உள்ள பால்சொசைட்டி கட்டிடம் அருகே சென்ற போது, அங்கு குடிபோதையில் இருந்த சத்தியராஜ், உன் நண்பனால் தான் எனது மனைவி என்னை விட்டு பிரிந்து போனாள் என வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியராஜ், தான் வைத்திருந்த கத்தியால் சந்தோஷ்குமாரை மார்பிலும், வலது கையிலும் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, சத்தியராஜை கைது செய்தார்.
Related Tags :
Next Story