எளிமையான, எளிதாக அணுகக்கூடியவர் காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி; முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் எம்.பி. பிரச்சாரம்


எளிமையான, எளிதாக அணுகக்கூடியவர் காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி; முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் எம்.பி. பிரச்சாரம்
x
தினத்தந்தி 29 March 2021 8:15 AM IST (Updated: 29 March 2021 8:08 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காரைக்குடி, அமராவதி புதூர், கல்லுப்பட்டி கண்டனூர் பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது.

இந்தியாவின் மூத்த கட்சி காங்கிரஸ் கட்சி இதற்கு ஆழமான வேர்கள் உள்ளன. 1949 -ல் தொடங்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம். இதற்கு ஆலமரம் போல வீச்சு இருக்கிறது.உழைக்கும் வர்க்கத்திற்காக காலகாலமாக போராடி வரும் கம்யூனிஸ்ட் கட்சியினர். தலித் மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொல்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். முஸ்லிம் சமுதாயத்தினரின் ஏக்கங்கள், துயரங்கள், எதிர் பார்ப்புகளை பிரதிபலிப்பதற்காக முஸ்லிம்லீக் கட்சி, மனிதநேய கட்சி.உலகெங்கும் உள்ள தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்துவரும் மறுமலர்ச்சி திமுக, நாங்கள் அனைவரும் திமுக தலைமையில் கூட்டணி அமைத்துள்ளோம். மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம்.எங்களிடம் ஒளிவு மறைவு இல்லை.திறந்த புத்தகமாக இருக்கி றோம். எதைச் செய்யப் போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கைகளில் விரிவாக கூறியுள்ளோம் .

காங்கிரஸ் கட்சி எளிமையான, எளிதாக அணுகக்கூடிய மாங்குடியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 10 ஆண்டு காலம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக சிறப்பாக பணியாற்றியவர். காரைக்குடி நகரின் வளர்ச்சியைக் காட்டி லும் சங்கராபுரம் ஊராட்சி பகுதியின் வளர்ச்சி விஞ்சி நிற்கிறது என்று பலரும் கூறும் அளவிற்கு சிறப்பாக பணியாற்றி மக்களிடம் நற்பெயர் பெற்றுள் ளார்.மாங்குடி கடின உழைப்பாளி.சங்கராபுரம் ஊராட்சி பகுதி மக்களின் பங்காளி. மங்கல நிகழ்ச்சியானாலும் துக்கநிகழ்ச்சியானாலும் முதல் ஆளாக நிற்பது மாங்குடிதான்.அவரது சிறப்பானபணியினால் காரைக்குடி தொகுதி 
மேலும் வளர்ச்சி பெறும்.அவருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

பாரதிய ஜனதா கட்சியில் சுதந்திரத்திற்காக போராடிய வர்கள் சிறை சென்றவர்கள் உள்ளனரா? சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன இயக்கம் ஆர்எஸ்எஸ்.ஆங்கி லேயர்களே ஆளட்டும் என்று சொன்னவர்கள். வெள்ளை யர்களை எதிர்த்து ஒருவர்கூட போராடவில்லை காரணம் மேட்டுக்குடியினர் மட்டுமே அடங்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள்.ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்று பிரதான கொள்கைகள் உள்ளன. ஒன்று இந்தியா இந்துக்கள் நாடு அது இந்துக் களுக்கே சொந்தம் மற்றவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்பது. மற்றொன்று இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும். அடுத்ததாக தமிழ்ச் சமுதாயம் எதிர்க்கும் சனாதன தர்மம் இம் மூன்றையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே அனைத்து மக்களும் அமைதியாக வாழ திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

ஆட்சி மாற்றம் என்ற இரண்டு சொற்கள் தமிழக மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதனை யாராலும் அழிக்க முடியாது. அறிவார்ந்த தமிழ்நாட்டில் ஏமாற்று அறிவிப்புக்களால் யாரும் ஏமாறப் போவது இல்லை. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வீற்றிருந்த நாற்காலியில் இன்று இருப்பவர்களைப் பார்த்து வேதனைபடுகிறேன். கண்களில் கண்ணீரோடு கூறுகிறேன் இந்த ஆட்சியினை மாற்றித் தாருங்கள்..திமுக-காங்கிரஸ் முற்போக்கு கூட்டணியை ஆதரியுங்கள். மாங்குடிக்கு கைசின்னத்தில் வாக்களியுங்கள் 

இவ்வாறு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

Next Story