சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசன் வீதி, வீதியாக பிரச்சாரம்


சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசன் வீதி, வீதியாக பிரச்சாரம்
x
தினத்தந்தி 29 March 2021 6:07 PM IST (Updated: 29 March 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசன் வீதி, வீதியாக தொண்டர்களுடன்பிரச்சாரம்

சிவகாசி சட்டமன்ற தொகு தியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் கடந்தசில  நாட்களாக தொகுதி முழுவதும் பல்வேறுபகுதியில் சூறாவளிபிரசாரம் செய்து வந்தார். இந்தநிலையில் 

நேற்று முன்தினம் மாலை முதல்& அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசி பஸ்நிலை யத்தில் வெற்றி வேட்பாளர் லட்சுமிகணேசனுக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தார்.இந்தபிரச்சாரதின் போது 13 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள்கலந்து கொண்டு முதல்&அமைச்சரின் பிரச்சா ரத்தை கேட்டனர். இந்த நிலையில் அ.தி.மு.க. வேட் பாளர் லட்சுமி கணேசன் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் தீவிரபிரச்சாரம் செய்து வருகிறார். திருத்தங்கல் நகர்மன்ற முன்னாள்தலைவர் வசந்திகணேசன் வீட்டுக்கு சென்றஅ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமிகணேசன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் நகர செயலாளர் பொன்சக்திவேல், வக்கீல் கணேசன் ஆகியோர் இருந் தனர். பின்னர் திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட 10,11,12ஆகிய வார்டு பகுதிகளில் வீடு, வீடாக சென்ற அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசன் பொதுமக்களிடம்இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டார். அந்தபகுதியில் உள்ள அ.தி.மு.க. மற்றும் கூட்டணி  கட்சி நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவனேசன், ரமணா, மகளிர் அணி முருகேஸ்வரி மற்றும்பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் சிவகாசிநகராட்சிக்கு உட்பட்ட 7,8,10,11,16,17,21,26,32,33 ஆகிய வார்டுகளில் பிரச் சாரம் மேற்கொண்டார். அப் போது அவர் பேசியதாவது:-
சிவகாசிசட்டமன்ற தொகு தியில் அதிகம் வாழும் பட்டாசு தொழிலாளர்களை பாது காக்கும் வகையில் முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பல்வேறு நடவடிக் கை எடுத்துள்ளனர். இனி வரும் காலங்களில் பட்டாசு தொழிலுக்கு எவ்வித பிரச்சி னையும் வராது. மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.1500& லிருந்து ரூ.2500 ஆகஉயர்த்தி வழங்கப்படும். தீப்பெட்டி மற்றும் அச்சுத்தொழிலை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள்எடுப்பேன்.பெண்களுக்கு உதவியாக ஆண்டு தோறும் 6 விலை யில்லாத கேஸ்சிலிண்டர்கள் வழங்கப்படும்.அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடு இல்லாத அனைவருக்கும் விலை யில்லாத வீடுகள் கட்டி கொடுக் கப்படும்.அரசு வேலைகளில் பெண்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கீடு உயர்த்தி வழங்கப் படும். அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லாத சூரிய சக்திசமையல் அடுப்பு வழங்கப் படும்.விலை யில்லாத வாசிங்மிஷின் வழங்கப்படும்.இப்படி எண்ணற்ற திட்டங்கள் அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அம்மாவின் அரசு, எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைய உள்ளது.அப்போது அனைத்து நலத் திட்டங்களும் பொதுமக்களை சென்று அடையும். எனவே பொது மக்கள் எனக்கு இரட்டை இலைசின்னத்தில் வாக்களித்து என்னை பெரு வாரியான ஓட்டு வித்தியா சத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறுஅவர் பேசினார். பிரச்சாரத்தின் போது பல இடங்களில் 
அ.தி.மு.க.  வேட்பாளர் லட்சுமி கணேசனுக்கு பொது மக்களும், அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story