அம்மாப்பேட்டையில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை பாபநாசம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி


அம்மாப்பேட்டையில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை பாபநாசம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி
x
தினத்தந்தி 29 March 2021 6:12 PM IST (Updated: 29 March 2021 6:12 PM IST)
t-max-icont-min-icon

அம்மாப்பேட்டையில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று பாபநாசம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி அளித்தார்.

பாபநாசம், 

பாபநாசம் சட்டமன்ற தொகுதி் தி.மு.க. கூட்டணி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லா அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

அம்மாப்பேட்டை பகுதியில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க பாடுபடுவேன். கயிறு தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன். பருத்தி நூல் ஆலை அம்மாபேட்டை பகுதியில் அமைய போராடுவேன். விவசாயிகளின் நலன் கருதி மற்றொரு நெல் ஆராய்ச்சி மையத்தினை அமைக்க உறுதுணையாக இருப்பேன். வைக்கோல் மற்றும் விவசாய மூலப்பொருளை கொண்டு காகித ஆலை தமிழக அரசு மூலம் அமைக்க முயற்சி செய்வேன். 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் அரியணையில் அமர்ந்த, அம்மாப்பேட்டையை தனி தாலுகாவாக மாற்ற உறுதுணையாக இருப்பேன். பாபநாசம் ெரயில் நிலையத்தில் திருச்செந்தூர், மைசூர் உள்பட அனைத்து விரைவு ரெயில்களையும் மீண்டும் நிறுத்த மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். 
வேட்பாளருடன் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கமிட்டி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், அம்மாப்பேட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தியாக. சுரேஷ்குமார், பி.எஸ்.குமார், அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன், அம்மாப்பேட்டை பேரூர் செயலாளர் சரவணன், மெலட்டூர் பேரூர் செயலாளர் சீனிவாசன் மற்றும் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள்  உடனிருந்தனர்.

Next Story