அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன் பிரசாரம்
அ.தி.மு.க. மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன் பிரசாரம்.
மலைக்கோட்டை,
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட் பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் நேற்று மலைக்கோட்டை பகுதியில் உள்ள 14-வது வார்டுக்கு உட்பட்ட நன்றுடை யான் கோவில் முன்பு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து இ.பி.ரோடு, ஆனந்த் அவென்யூ, கமலாநெரு நகர், காமராஜ்நகர், பாரதிநகர், கிருஷ்ணாபுரம், முஸ்லிம்தெரு, பூக்கொல்லை, வீரமாநகர், அலங்கநாதபுரம், ஜிம்மாதெரு வாட்டர் ஹவுஸ் வரை காலையிலும், சத்தியமூர்த்தி நகரில் தொடங்கி 15, 15எ வார்டுகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் மாலையிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நடந்தே சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராகவும், தமிழர்களின் கலாசாரத்திற்கும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், வன்முறைகளை தூண்டுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டி, நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. உங்களது ஆதர வோடு மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க உள்ளது. துரோகிகளுக்கும், எதிரிகளுக் கும் அச்சத்தையும், பாடத்தை யும் புகட்டுகின்ற வகையில் இந்த தேர்தல் இருக்க வேண்டும்.
அ.தி.மு.க. மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைக்கும். தற்போது நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த படும். தேர்தல் வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று பேசினார். இதில் அவைத் தலைவர் அய்யப்பன்,
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர் அன்பழகன், சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி, எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், வெல்லமண்டி ஜவகர்லால்நேரு. வட்டசெயலாளர்கள் ஜெயக்குமார், சிங்கமுத்து, கே.பி.ராமநாதன், நிர்வாகிகள் விஜயகுமார், காமேஷ்வரன், சக்திவேல், ராஜேந்திரன், ரத்தினம், சந்துரு, ரஜினி பெரியண்ணா, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மகேந்திரன், நடராஜன், பெரிய சாமி உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது, சென்ற இடமெல்லாம் ஆண்களும், பெண்களும் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து உற்சாகப்படுத்தினர்.
Related Tags :
Next Story