மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் துறையூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின்குமார் வாக்குறுதி
துறையூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் துறையூர் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
துறையூர்,
துறையூரில் உள்ள நகர் பகுதியில் மேட்டுத் தெரு, பாரதி அரங்கம், ஆத்தூர் ரோடு, தெப்பக்குளம், வடக்குத்தெரு, கீழ கடைவீதி, கட்டபொம்மன் தெரு, சிக்க பிள்ளையார் கோவில் தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, பண்டரிநாதன் தெரு, குட்டகரை, குட்ட கரைமேடு, காமராஜர் நகர், எக்ஸ்டென்ஷன், பாலக்கரை, கடைவீதி, முத்தையா காலனி, ஆஸ்பத்திரி ரோடு, புது காட்டு தெரு, விநாயகர் தெரு, சொரத்தூர் ரோடு, நெசவாளர் காலனி உள்பட துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் நேற்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கி ஆராத்தி எடுத்து பரிவட்டம் கட்டி பெண்கள் வரவேற்றார்கள். பின்னர் ஸ்டாலின் குமார் பேசுகையில், கழகத் தலைவர் ஸ்டாலின் மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர். அதனை மனதில் கொண்டு முத்தான தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளார். குடும்பத் தலைவிகள் நலனில் அக்கறை கொண்டு உரிமை தொகையாக ரூ.1,000, ஏழை, எளிய விவசாயிக ளின் விவசாய கடன் ரத்து செய்யப்படும். மாணவ- மாணவி கள் பெற்ற கல்விக் கடனை மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தற்போது பெட்ரோல், டீசல், பால் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே உள்ளது. அதை குறைந்த விலையில் தருவதாகவும் அறிவித்துள்ளார்.
இத்தகைய நலத்திட்டங்களை தங்களுக்கு பெற்று கொடுத்திட மீண்டும் என்னை உங்களின் ஒருவனாகவும், உங்கள் வீட்டுப் பிள்ளையாகவும் பணியாற்றிட மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று கூறினார். அப்போது மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செய லாளர் அண்ணாதுரை, இளைஞ ரணி அமைப்பாளர் கிட்டப்பா, மாவட்ட பிரதிநிதிகள் மதியழ கன், கார்த்திகேயன் மாவட்ட வர்த்தக அணி திருமூர்த்தி, ஆதிதிராவிடர் நலக்குழு மகா லிங்கம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி சேகர் உள்பட தொண்டர்கள், நிர்வாகி கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story