திருவெறும்பூர் தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளர் முருகானந்தம் தீவிர வாக்கு சேகரிப்பு


திருவெறும்பூர் தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளர் முருகானந்தம் தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 29 March 2021 8:18 PM IST (Updated: 29 March 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் தொகு திக்கு உட்பட்ட அரியமங் கலம், அம்பிகாபுரம், ஆயில்மில் பகுதிகளில் டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்தார்.

திருவெறும்பூர், 

மக்கள் நீதி மய்யம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட் பாளர் எம்.முருகானந்தம் தனது தேர்தல் பிரசாரத் தின் ஒரு பகுதியாக  திருவெறும்பூர் தொகு திக்கு உட்பட்ட அரியமங்கலம், அம்பிகாபுரம், ஆயில்மில் பகுதிகளில் டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்தார். 

அப்பகுதியில் பேசுகையில், நேர்மை என்னும் ஒற்றை சொல்லை மைய மாக வைத்து மாற்றம் நம்மிடம் மட்டுமே இருந்து துவங்க வேண்டும் என்று முருகானந்தம் மக்களிடையே கூறினார்.

அங்கிருந்த மக்கள் எங்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால் அவர் களை விரட்டி அடித்து, எங்களின் நேர்மையை பறைசாற்றுவோம் என்று உரக்கக்கூறினார்கள். அப்பகுதி 25 வயதுக்கு உட்பட் இளைஞர் களுக்குவேலை வாயப்பு செய்து தருவதாகவும், அப்பகுதி மக்கள் குப்பை கிடங்கால் அவதிப்படுகின்றனர். அதை அகற்றி மின்சார உற்பத்தி செய்து தருவதாக உறுதி அளித்தார்.

பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்ய தொண் டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் தமிழ் நாடு மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆகியோருடன் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் நற்பணி இயக் கம் ஜானி பாஷா, தலைமை கழக நிர்வாகிகள் அப்துல் ரஜாக், எல்.கே.விஜயகாந்த் மற்றும் ஒன்றிய செயலா ளர் சூரியூர் சக்தி ஆகியோர் உடன் சென்றனர்.

Next Story