தி.மு.க. வேட்பாளர் கதிரவனுக்கு திருஷ்டி கழித்த திருநங்கைகள்


தி.மு.க. வேட்பாளர் கதிரவனுக்கு திருஷ்டி கழித்த திருநங்கைகள்
x
தினத்தந்தி 29 March 2021 9:01 PM IST (Updated: 29 March 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

சின்னகாட்டுகுளம் , தண்ணீர் பந்தல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாக நடந்து சென்று வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரித்தார்.

திருச்சி, 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிரவன்  மணியம்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த போது, 10 திற்கும் மேற்பட்ட திரு நங்கைகள், வேட்பாளருக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்தனர். 

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதி யில் உள்ள புலிவலம், மணியம்பட்டி, பெரமங்கலம், குருவிக்காரன்குளம், தெற்கு பள்ளம், அண்ணாநகர், உடையான் பட்டி, பெரிய காட்டுகுளம், சின்னகாட்டுகுளம் , தண்ணீர் பந்தல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாக நடந்து சென்று  வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும் போது, நீங்கள் என்னை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறச்செய்தால் உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதும்  நிறைவேற்றி தருவேன். அரசு ஆரம்பப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவேன். அதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தருவேன்.  

சமயபுரத்திலிருந்து நாமக்கல் வரை பஸ் வசதி ஏற்படுத்தி தருவேன். இதற்கு முன் இருந்த எம்.எல்.ஏ. ஓட்டு கேட்க  வந்தார் வெற்றி பெற செய்தோம் அதன் பின்னர் எம்.எல்.ஏ. தொகுதி பக்கமே வரவில்லை எனக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன் உங்களில் ஒருவனாய், உங்களோடு ஒருவனாய் இருப்பேன் என்றார். அப்பகுதி மக்கள் வேட்பாளருக்கு  மாலை அணிவித்து, பூக்களை தூவியும்,  ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் காட்டுகுளம் கணேசன், ம.தி.மு.க. திருச்சி மாவட்ட செயலாளர் டி.டி.சி. சேரன், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் செந்தில் மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

Next Story