பட்டாசு தொழிலை காப்பாற்ற முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன் மாணிக்கம்தாகூர் எம்.பி. சவால்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர் நேற்று சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது.
விருதுநகர்,
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அசோகன் கடந்த சில நாட்களாக தொகுதியின் பல்வேறு பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம்தாகூர் நேற்று சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த சட்டமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஏப்ரல் 6-ந்தேதி நீங்கள் அளிக்க கூடிய வாக்கு சிவகாசி சட்டமன்ற தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல உதவும். இந்த தொகுதி வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் கூறுவது, புல்லட் ரெயில் விட வேண்டும் என்பது அல்ல. வாரத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். தற்போது மாதத்துக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் பட்டாசு தொழிலை நம்பி உள்ளனர். ஆனால் பட்டாசு தொழில் தற்போது என்ன நிலையில் இருக்கிறது? என்று உங்களுக்கு தெரியும். பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கா கத்தான் சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பட்டாசு தொழிலை பற்றி தெரிந்த அசோகனை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். உங்கள் பிரச்சினைகள் அவருக்கு எளிதில் புரியும்.
அரசன் அசோகன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவு டன் பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு ஏற்படும். அப்படி அந்த தொழிலை காப்பாற்ற முடியவில்லை என்றால் நான் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரேசன் கார்டு உள்ள அனைத்து குடும்பத்தினருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின் போது சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவர் சபையர் ஞானசேகரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜா சொக்கர், நகர தலைவர் குமரன், மாநில தகவல் உரிமை சட்ட நிர்வாகி மைக்கேல், துணைத்தலைவர் முத்துமணி, சாமுவேல் நாடார், தெற்கு வட்டார தலைவர்கள் பைபாஸ் வைரம், சங்கர் ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் சேர்மதுரை, காசி, பாவா இஸ்மாயில், ரவிசங்கர், கணேசன், வைரமுத்து, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மோகன், தொகுதி தலைவர் ஓ.பி.சி. பசுபதி, முன்னாள் நகர்மன்ற தலைவர் சசிநகர் முருகேசன், தி.மு.க. நகர பொறுப்பாளர் காளிராஜன், திருத்தங்கல் நகர பொறுப்பாளர் உதயசூரியன், முன்னாள் கவுன்சிலர்கள் மாணிக்கம், குருசாமி, கருணாநிதிபாண்டியன், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story