300 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு


300 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
x
தினத்தந்தி 29 March 2021 9:14 PM IST (Updated: 29 March 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் 300 வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் பழனிவேல்ராஜன். 

இவர் தேனி மீறுசமுத்திரம் கண்மாய் கரையோரம் வாழை சாகுபடி செய்துள்ளார். 

நேற்று முன்தினம் இந்த வாழைத் தோட்டத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி சாய்த்துள்ளனர். 

இதையறித்த பழனிவேல்ராஜன் தனது தோட்டத்துக்கு சென்று பார்வையிட்டார். 

பின்னர், அவர் இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில், வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் யார்? வெட்டியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story