கோவில்பட்டி கோவிலில் ஐந்து கருடசேவை
கோவில்பட்டி கோவிலில் ஐந்து கருடசேவை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி திருமால் நகரில் அமைந்துள்ள ஐஸ்வரிய வீர லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் உலக நன்மைக்காக 108 நாட்கள் மகா யாகம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி காலை 5 மணிக்கு கோ பூஜை, திருப்பள்ளிஎழுச்சி, விஸ்வரூபம், திருவாராதனம், திருப்பாவை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.காலை 9 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் மகா பூர்ணாஹூதி வைபவம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு லட்சுமி நரசிம்மர் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு கோவிந்தராஜ ராமானுஜ தாசன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நகரில் முதல் முறையாக ஐந்து கருட சேவை வீதி உலா சிறப்பாக நடைபெற்றது
Related Tags :
Next Story