அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி


அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 29 March 2021 4:36 PM GMT (Updated: 29 March 2021 4:36 PM GMT)

அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் தக்காளி சந்தை நடைபெற்று வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கும் தக்காளிகள் அனுப்பப்படுகின்றன.

 சராசரியாக 5 டன் வரை தக்காளிகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் அய்யலூரில் நேற்று நடந்த சந்தையில் ஏராளமான விவசாயிகள் தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

 பெட்டி, பெட்டியாக தக்காளிகள் குவிந்தன. வரத்து அதிகரிப்பு எதிரொலியாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது. 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ஒன்று ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.4 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்தது. 

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, பாதுகாத்து வளர்த்து, கூலியாட்கள் மூலம் பறித்து, வாகனங்களில் சந்தைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story