நாளை மறுநாள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திருக்கோவிலூர் வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) திருக்கோவிலூருக்கு வருகைதந்து பா.ஜ.க. வேட்பாளர் வி.ஏ.டி. கலிவரதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருக்கோவிலூர்
தீவிர ஓட்டுவேட்டை
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள். மேலும் இவர்களுக்கு ஆதரவாக கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகளும் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர்மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தமிழகம் வருகிறார்கள்.
நாளை மறுநாள்
உள்துறை மந்திரி அமித்ஷா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) திருக்கோவிலூருக்கு வருகிறார். மதியம் 2 மணி அளவில் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வி.ஏ.டி.கலிவரதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி திருக்கோவிலூர் நகரம் முழுவதும் கட்சி கொடி தோரணங்களால் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பிரசார கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி் பா.ஜ.க., அ.தி.மு.க. தலைமையிலான தேர்தல் பணிக்குழு முன்னின்று செய்து வருகிறது.
Related Tags :
Next Story