300 பேர் வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்தனர்
தேவகோட்டை முன்னாள் நகர் மன்றத்தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தலைமையில் 300 பேர் வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்தனர் .
சிவகங்கை,
காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி காரைக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவிலூர் பகுதியில் பேசும் போது, இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு குடிநீர் ஆதாரத்திற்கு மக்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயன தொழிற்சாலையை மூட தீவிர முயற்சி மேற்கொள்வேன் என்றார். மற்ற பகுதிகளில் பேசும்போது உங்கள் அனைவரின் மனதிலும் நிற்கும் வகையில் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவேன். நான் பொது வாழ்க்கையில் இதுவரை எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவன். காரைக்குடியில் ஆக்கிரமிப்புக்களால் காணாமல்போன கால்வாய்களை மீட்டெடுத்து அதனை சீரமைத்து குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பேன் அ தி.மு.க.வில் இருக்கும் போது அதனுடைய வளர்ச்சிக்கு உழைத்தவன் நான். அதி.மு.க.விற்கு உழைத்தவன் வேண்டுமா அதனை அழிக்க நினைப்பவர்கள் வேண்டுமா என்பதை நண்பர்கள் தீர்மானிக்க வேண்டும். தி.மு.க. நண்பர்களே இம்முறை உங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு காரைக்குடி தொகுதியில் நீங்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. சிந்தித்து செயல்படுங்கள். தொகுதி மக்களின் உரிமைகளை காப்பதில் எவ்வித சமரசத்துக்கும் ஆளாக்காமல் செயல்படுவேன். தொகுதியை அனைத்து நிலைகளிலும் சிறக்க செய்வேன். வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதீர்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண உண்மையான அக்கறையோடு உழைப்பேன்.இவ்வாறு பேசினார். பின்னர் தேவகோட்டையில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தலைமையில் 300 பேர் தங்களை வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தேர்போகி வே.பாண்டியின் வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story