மாணவனை சுத்தியலால் தாக்கிய சக மாணவன் கைது
தேனி மாவட்டத்தில் மாணவனை சுத்தியலால் தாக்கிய சக மாணவனை போலீசார் கைது செய்தனர்.
தேனி :
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 17 வயது மாணவனும், 18 வயது மாணவனும் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது 2 மாணவர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த 18 வயது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் 17 வயது மாணவனை தாக்கினான்.
இதில் அந்த மாணவன் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
உடனே ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 வயது மாணவனை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story