தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அ.தி.மு.க. துணை நிற்கும்


தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அ.தி.மு.க. துணை நிற்கும்
x
தினத்தந்தி 29 March 2021 11:57 PM IST (Updated: 29 March 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் என்று காரைக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் நடிகை காயத்ரி ரகுராம் கூறினார்.

காரைக்குடி,

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் என்று காரைக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் நடிகை காயத்ரி ரகுராம் கூறினார்.

காயத்ரி ரகுராம் பிரசாரம்

காரைக்குடி சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகையும், பாரதீய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாசார அணியின் மாநில தலைவருமான காயத்ரி ரகுராம் கணேசபுரம், மருதுபாண்டியர்நகர், ரெயில்வே, சேர்வார் ஊருணி, மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களிடம் நன்றாக போய் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பெண்கள் குறித்து இழிவாக பேசி வருகின்றனர். அதிலும் தமிழக முதல்-அமைச்சரின் தாயார் குறித்தே பேசுகின்றார்கள் என்றால் சாமானிய பெண்களின் நிலைமையை பற்றி யோசித்து பார்க்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பு

 ஏற்கனவே அழகு நிலையங்களில் பெண்ணை தாக்கும் தி.மு.க.வினர். பரோட்டா மற்றும் பிரியாணி கடையில் உரிமையாளர்களை தாக்கும் தி.மு.க.வினர் என தொடர்ந்து செய்திகளை நாம் பார்த்து வருகிறோம்.
எனவே இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டுமானால் நடைபெற உள்ள தேர்தலில் அவர்களுக்கு நீங்கள் தான் தீர்ப்பை வழங்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு அ.தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.




Next Story